Sri Lankan Embassy in Riyadh Ceremonially Welcomes the New Year 2025
The Sri Lankan Embassy in Riyadh ceremonially began its New Year 2025 activities on 1st of January 2025. The event commenced with the raising of the National Flag by the Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad at the Embassy premises followed by singing of the national anthem, lighting of the traditional oil lamp, and a two-minute silence to honor those who sacrificed their lives for the nation. The Embassy staff recited the Oath of Public Servants reaffirming dedication to their responsibilities. This year’s oath emphasized the Government’s “Clean Sri Lanka” initiative with the objective of making a fruitful transformation in moral, environmental and social aspects.
Ambassador Ameer Ajwad addressed the gathering reflecting on the Mission’s unprecedented achievements for the six months of the past year 2024 and expressing his gratitude to all the staff of the Mission for their commitment and dedication in achieving those targets. He highlighted the success of two key new initiatives by the Mission such as the community outreach programme called “Talk to Your Ambassador” which provides a forum for the Sri Lankan community in the Kingdom to talk directly with their country’s Ambassador and find solutions for their issues. The other new initiative launched by the Embassy was the Green Campaign by planting trees in the Kingdom in collaboration with the Saudi Government authorities to mark the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia. Ambassador also outlined the Mission’s work programme for the new year 2025 and requested the staff for their continued cooperation especially in achieving the Government’s “Clean Sri Lanka” objectives.
The ceremony concluded with the sharing of traditional Sri Lankan foods and sweets prepared by the staff of the Embassy making the beginning of the New Year 2025 homely.
Embassy of Sri Lanka
Riyadh
02.01.2025
___________________________________________________________
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය 2025 නව වසර චාරිත්රානුකූලව පිළිගනී
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය 2025 ජනවාරි 01 වන දින උත්සවාකාරයෙන් සිය අලුත් අවුරුදු කටයුතු ආරම්භ කරන ලදී. සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් විසින් තානාපති කාර්යාල පරිශ්රයේ දී ජාතික ධජය එසවීමෙන් අනතුරුව ජාතික ගීය ගායනය, සම්ප්රදායික තෙල් පහන දැල්වීම සහ ජාතිය වෙනුවෙන් දිවි පිදූ විරුවන්ට ගෞරව කිරීමට විනාඩි දෙකක කාලයක් නිශ්ශබ්දතාවයෙන් පසු උත්සවය ආරම්භ විය. තානාපති කාර්යාල කාර්ය මණ්ඩලය තම වගකීම් වෙනුවෙන් කැපවන බව යලිත් තහවුරු කරමින් රාජ්ය සේවකයන්ගේ දිවුරුම ලබාදෙන ලදී. සදාචාරාත්මක, පාරිසරික සහ සමාජීය අංශවල ඵලදායි පරිවර්තනයක් ඇති කිරීමේ අරමුණ ඇතිව රජයේ “Clean Sri Lanka පුරවැසි දිවුරුම ” දිවුරුම් දීමෙන් අවධාරණය කෙරිණි.
තානාපති අමීර් අජ්වාඩ් මහතා රැස්ව සිටි පිරිස ඇමතූ අතර, පසුගිය 2024 වසරේ මාස හයක කාලය තුළ දූත මණ්ඩලයේ පෙර නොවූ විරූ ජයග්රහණ පිළිබිඹු කරමින් එම ඉලක්ක සපුරා ගැනීම සඳහා වූ කැපවීම පිළිබඳව දූත මණ්ඩලයේ සියලුම කාර්ය මණ්ඩලයට සිය කෘතඥතාව පළ කළේය. සෞදි රාජ්යයේ සිටින ශ්රී ලාංකික ප්රජාවට තම රටේ තානාපතිවරයා සමඟ සෘජුව කතා කිරීමට සහ ඔවුන්ගේ ගැටලුවලට විසඳුම් සෙවීමට සංසදයක් පිහිටවු අතර “ඔබේ තානාපතිවරයා සමඟ කතා කරන්න” නම් ප්රජා සත්කාර වැඩසටහනෙහි සාර්ථකත්වය ද ඔහු අවධාරණය කළේය. ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතාවලට වසර 50ක් පිරීම නිමිත්තෙන් සෞදි රජයේ බලධාරීන් සමඟ එක්ව රාජධානියේ ගස් සිටුවා ආරම්භ කරන ලද හරිත ව්යාපෘතිය තානාපති කාර්යාලය විසින් දියත් කරන ලද අනෙක් නව වැඩපිළිවෙළයි. තානාපතිවරයා 2025 නව වසර සඳහා දූත මණ්ඩලයේ වැඩපිළිවෙල ද විස්තර කළ අතර විශේෂයෙන් රජයේ “ Clean Sri Lanka ” අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා කාර්ය මණ්ඩලයේ අඛණ්ඩ සහයෝගය ඉල්ලා සිටියේය.
තානාපති කාර්යාල කාර්ය මණ්ඩලය විසින් සකස් කරන ලද ශ්රී ලාංකීය සම්ප්රදායික ආහාර සහ රසකැවිලි සංග්රහයෙන් අනතුරුව 2025 නව වසර ආරම්භක උත්සවය අවසන් විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.01.02
___________________________________________________________
மலர்ந்துள்ள புது வருடத்தை வெகுவிமரிசையாக வரவேற்ற ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம்
ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் புது வருடம் – 2025க்கான தனது செயற்பாடுகளை சனவரி மாதம் முதலாம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தது. தூதரக வளாகத்தில் இடம் பெற்ற மேற்படி வைபத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதுடன் தேச நலனுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை கௌரவிப்பதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் தூதரக அலுவலர்களால் தமது பொறுப்புக்களை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவது தொடர்பான அரச ஊழியர்களுக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இவ்வருடத்துக்கான உறுதிமொழி அரசாங்கத்தின் “க்ளீன் ஸ்ரீலங்கா” முன்னெடுப்புத் திட்டத்தினை பண்பாட்டு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சூழல் சார் அடிப்படையிலும் விளைதிறன் மிக்க விதத்தில் அடையச் செய்வதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
குறித்த வைபவத்தில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டின் பின்னரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதுமில்லாத அடைவுகள் தொடர்பாக குறித்துக் காட்டியதுடன் அந்த இலக்குகளை அடையப் பெறுவதற்காக அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் பாடுபட்ட தூதரக அலுவலர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய தூதுவர் அவர்கள் இக்காலப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்ற பிரதானமான இரண்டு புதிய முன்னெடுப்புகளைப் பற்றித் தொட்டுக் காட்டினார். அவற்றில் முதலாவது சவுதி வாழ் இலங்கையர்கள் தமது தூதுவருடன் நேரடியாக உரையாடி தமது பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற நிகழ்ச்சி திட்டமாகும். இரண்டாவது சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை நினைவுபடுத்து முகமாக சவுதி அரேபிய அதிகார சபைகளுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் சவுதி அரேபியாவில் முன்னெடுத்து வருகின்ற மரநடுகை வேலை திட்டமாகும். தொடர்ந்து மலர்ந்துள்ள புதிய வருடத்திற்கான தூதரகத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் எடுத்துரைத்த தூதுவர் அவர்கள் தூதரக அலுவலர்கள் அனைவரும் இவ்வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், குறிப்பாக அரசாங்கத்தின் “க்ளின் ஸ்ரீலங்கா” இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
இறுதியாக மலர்ந்துள்ள 2025வது புது வருடத்தை இன்பகரமாக ஆரம்பிக்கும் நோக்கில் தூதரக அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டதுடன் வைபவம் இனிதே நிறைவடைந்தது.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
02.01.2025