


Sri Lanka Tourism Featured at the Saudi Travel Market – 2025
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad officially inaugurated the Sri Lankan Booth of the Serendib Travels at the Saudi Travel Market 2025 held in Riyadh from 10- 12 February 2025 at the Riyadh International Convention and Exhibition Center.
The Saudi Travel Market is one of the largest travel exhibitions in the Middle East region which stands as a testament to innovation, collaboration, and global connectivity. It serves as a B2B networking hub for industry leaders, innovators, and enthusiasts where they can have fruitful collaborations and partnerships within the industry. It also serves as a premier platform for the exhibitors to explore, network and unlock the kingdom’s vast potential.
Serendib Travel Holidays, one of the pioneer Destination Management Companies in Sri Lanka and a leading tour operator for inbound Customized Tour packages to Sri Lanka, successfully participated from Sri Lanka at this event. More than 135 exhibitors from 20 countries participated at this 2nd edition of the Saudi Travel Market this year.
Speaking during the occasion, Ambassador Ameer Ajwad emphasized the importance of participation of other Sri Lankan tour operators at such a big profiled event in Saudi Arabia with a view to forging collaborations and partnerships to promote tourism industry in Sri Lanka. He also offered support by the Embassy to facilitate such a participation from Sri Lanka in the future.
Embassy of Sri Lanka
Riyadh
03.03.2025
සෞදි සංචාරක වෙළඳපොළ 2025 සඳහා ශ්රී ලංකා සංචාරක ව්යාපාර ඉදිරිපත්වේ.
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් විසින් 2025 පෙබරවාරි 10 සිට 12 දක්වා රියාද් ජාත්යන්තර සම්මන්ත්රණ සහ ප්රදර්ශන මධ්යස්ථානයේදී හි පැවති සෞදි සංචාරක වෙළෙඳපොළ 2025 හි සෙරන්ඩිබ් ට්රැවල්ස් හි ශ්රී ලංකා කුටිය නිල වශයෙන් විවෘත කරන ලදී.
සෞදි සංචාරක වෙළෙඳපොළ යනු මැදපෙරදිග කලාපයේ විශාලතම සංචාරක ප්රදර්ශනවලින් එකක් වන අතර එය නවෝත්පාදනය, සහයෝගීතාවය සහ ගෝලීය සම්බන්ධතාව සඳහා ගිවිසුමක් ලෙස පවතී. එය කර්මාන්තයේ ප්රමුඛයන්, නවෝත්පාදකයින් සහ උද්යෝගිමත් පුද්ගලයින් සඳහා B2B ජාලකරණ මධ්යස්ථානයක් ලෙස කටයුතු කරයි. එය ප්රදර්ශකයින්ට රාජධානියේ විශාල විභවයන් ගවේෂණය කිරීමට, ජාලගත කිරීමට ප්රමුඛ වේදිකාවක් ලෙසද ක්රියා කරයි.
මෙම අවස්ථාවට ශ්රී ලංකාව නියෝජනය කරමින් ශ්රී ලංකාවේ පුරෝගාමී ගමනාන්ත කළමනාකරණ සමාගමක් වන සෙරන්ඩිබ් ට්රැවල් හොලිඩේස් සහභාගී විය. මෙවර සෞදි සංචාරක වෙළඳපොලේ දෙවන අදියර සඳහා රටවල් 20 කින් ප්රදර්ශකයින් 135 කට වැඩි පිරිසක් සහභාගී වූහ.
සංචාරක කර්මාන්තය ප්රවර්ධනය කිරීම සහ හවුල්කාරිත්වයන් ඇති කර ගැනීමේ අරමුණින් පුළුල් පරාසයකින් යුතුව සෞදි අරාබියේ පැවැත්වෙන මෙම අවස්ථාව සඳහා අනෙකුත් ශ්රී ලාංකික සංචාරක ක්රියාකරුවන්ගේ සහභාගීත්වයේ වැදගත්කම මෙම අවස්ථාවේදී අදහස් දක්වමින් තානාපති අමීර් අජ්වාඩ් අවධාරණය කළේය. අනාගතයේදී ශ්රී ලංකාවෙන් එවැනි සහභාගීත්වයක් සඳහා පහසුකම් සැලසීමට තානාපති කාර්යාලයේ සහාය ලබාදෙන බව ද ඔහු ප්රකාශ කළේය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.03.03
சவுதி பயணச் சந்தை – 2025 நிகழ்வில் இலங்கைச் சுற்றுலாத் துறை பங்கேற்பு
ரியாதிலுள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் கடந்த பெப்ரவரி 10 – 12ம் திகதி வரை இடம்பெற்ற சவுதி பயணச் சந்தை – 2025 (Saudi Travel Market – 2025) நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த செரண்டிப் ட்ரவல்ஸின் இலங்கை மையத்தை (Sri Lankan Booth) சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
சவுதி பயணச் சந்தை என்பது மத்திய கிழக்கில் நடாத்தப்படுகின்ற பாரிய கண்காட்சிகளில் ஒன்றாகும். புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய இணைப்பு என்பவற்றுக்கான சான்றாகத் திகழ்கின்ற இப்பயணச் சந்தையானது கைத்தொழிற்துறை முன்னோடிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கிடையிலான வர்த்தக வலைப்பின்னல் மையமாகச் செயற்பட்டு, தொழில் துறையில் பலனளிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலும் இது கண்காட்சியாளர்களுக்கு சவுதி அரசின் மூலம் கிடைக்கப் பெறும் சாத்தியமான பரந்த வாய்ப்புக்கள் தொடர்பில் ஆய்வு செய்யவும், வலையமைப்புகளை விரிவுபடுத்தவும் உதவுகின்ற முதன்மைத் தளமாக உள்ளது.
இலங்கை சார்பில், இலங்கையின் முன்னோடி சுற்றுலாத் தல முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகவும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலா பெக்கேஜ்களை உருவாக்கி வழங்குவதில் முன்னணி செயற்பாட்டாளராகவும் திகழ்கின்ற ‘செரண்டிப் ட்ராவல் ஹாலிடேஸ்’ இந்நிகழ்வில் வெற்றிகரமாக பங்கேற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற சவுதி பயணச் சந்தை – 2025 (Saudi Travel Market – 2025) யின் இரண்டாம் கட்ட நிகழ்வில் 20 நாடுகளைச் சேர்ந்த 135 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், சவுதி அரேபியாவில் நடைறுகின்ற இது போன்ற பெரிய நிகழ்வுகளில் இலங்கைச் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு முயற்சிகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த ஏனைய சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து வரும் இத்தகைய பங்கேற்புகளுக்கு அவசியமான வசதிகளை செய்து கொடுப்பதற்கான தூதரகத்தின் ஆதரவு கிடைக்கப்பெறும் எனவும் உறுதியளித்தார்.
இலங்கை தூதரகம்
ரியாத்
03.03.2025