Sri Lanka Cuisine Featured at Saudi Food Culture Festival

Sri Lanka Embassy in Riyadh organized display of an array of Sri Lankan cuisines at the Food Culture Festival 2025 held in Grassy Park at Diplomatic Quarter, Riyadh from 05th to 09th February 2025. Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O.L. Ameer Ajwad, inaugurated the Sri Lankan food kiosk at the festival. The festival offered a mix of gastronomic delights to the visitors through four zones namely, workshop zone, Theater zone, Booths and kids zone.

Sri Lanka was featured in diverse activities during this event including workshops, food kiosk and live performances. An array of Sri Lankan traditional foods were showcased and served to the visitors. In parallel, Sri Lankan chefs demonstrated live cooking at the workshop area for 03 days by making Sri Lankan traditional cuisines such as Pol Roti, Fish cutlet, Kottu, Kokis and Konda Kevum.

Traditional dancing were performed live during the event by the Sri Lanka International School children as well as professional dancers showcasing Sri Lanka’s rich cultural and traditional heritage.

The Exhibitors Area showcased more than 30 booths representing food kiosks and retail stores from around the world, inviting visitors to indulge in a world of flavors and explore unique items. Saudi Culinary Arts Commission organized this Food Culture Festival in collaboration with the Quality-of-Life Program which is a key component of Saudi Vision 2030 that aims to promote Saudi contributions to arts and culture.

Sri Lanka Embassy

Riyadh

24.02.2025

___________________________________________________________

සෞදි ආහාර සංස්කෘතික උළෙලේ දී ශ්‍රී ලංකා ආහාර පිසීම

රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් 2025 පෙබරවාරි 05 සිට 09 දක්වා රියාද්හි Diplomatic Quarter හි පිහිටි ග්‍රාසි පාර්ක් හි පැවති ආහාර සංස්කෘතික උළෙල 2025 හි ශ්‍රී ලාංකීය ආහාර වර්ග මාලාවක් ප්‍රදර්ශනය කිරීම සංවිධානය කරන ලදී. සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වාඩ් විසින් උත්සවයේ දී ශ්‍රී ලංකා ආහාර ප්‍රදර්ශන කුටිය විවෘත කරන ලදී. වැඩමුළු කලාපය, රඟහල කලාපය, කුටි සහ ළමා කලාපය යන කලාප හතරක් හරහා මෙම උත්සවය අමුත්තන්ට විවිධ රසයන් මිශ්‍ර කළේය.

මෙම අවස්ථාව තුළ වැඩමුළු, ආහාර කුටි සහ සජීවී ප්‍රසංග ඇතුළු විවිධ ක්‍රියාකාරකම් සඳහා ශ්‍රී ලංකාව ඉදිරිපත් විය. ශ්‍රී ලාංකේය සම්ප්‍රදායික ආහාර වර්ග රාශියක් ප්‍රදර්ශනය කර නරඹන්නන් වෙත පිරිනැමීම ද සිදු විය. ඊට සමගාමීව, ශ්‍රී ලාංකික සූපවේදීන් දින 03ක් වැඩමුළු පරිශ්‍රයේ දී පොල් රොටි, මාළු කට්ලට්, කොත්තු, කොකිස් සහ කොණ්ඩ කැවුම් වැනි ශ්‍රී ලාංකේය සම්ප්‍රදායික ආහාර වර්ග පිළියෙල කරමින් සජීවී ආහාර පිසීම ප්‍රදර්ශනය කළහ.

ශ්‍රී ලංකාවේ පොහොසත් සංස්කෘතික හා සම්ප්‍රදායික උරුමයන් ප්‍රදර්ශනය කරමින් ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසල් ළමුන් මෙන්ම වෘත්තීය නර්තන ශිල්පීන් විසින් සාම්ප්‍රදායික නැටුම් සජීවීව ඉදිරිපත් කරන ලදී.

ප්‍රදර්ශනය තුල ලොව පුරා ආහාර කුටි සහ සිල්ලර වෙළඳසැල් නියෝජනය කරන කුටි 30කට වැඩි ප්‍රමාණයක් පැවති අතර, ලෝකයේ ඇති විවධ රසයන් විදීමට අමුත්තන්ට ආරාධනා කළේය. කලාව සහ සංස්කෘතිය සඳහා සෞදියේ දායකත්වය ප්‍රවර්ධනය කිරීම අරමුණු කරගෙන සෞදි සූපශාස්ත්‍ර කොමිෂන් සභාව මෙම ආහාර සංස්කෘතික උළෙල සංවිධානය කලේ Saudi Vision 2030 හි ප්‍රධාන අංගයක් වන ජීවන තත්ත්ව වැඩසටහන සමඟ සහයෝගයෙන්ය .

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

24.02.2025

___________________________________________________________

சவுதி உணவு கலாசாரப் பெருவிழாவில் இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகள்

ரியாதிலுள்ள இராஜதந்திர வசிப்பிடப் பிராந்தியத்தில் (Diplomatic Quarter) அமைந்துள்ள கிராஸி பார்க்கில் கடந்த பெப்ரவரி 05 – 09ம் திகதி வரை இடம்பெற்ற உணவு கலாச்சார விழா – 2025 நிகழ்வில் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை உணவு வகைகளையும் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் மேற்படி விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை உணவு மையத்தை திறந்து வைத்தார். மேற்படி பெருவிழா செயன்முறை வலயம் (Workshop zone), கொட்டகை வலயம் (Theater zone), சாவடிகள் (Booths) மற்றும் சிறுவர் வலயம் (Kids zone) என 4 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு பல்சுவை அம்சங்களை பார்வையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இடம்பெற்று முடிந்த இந்த உணவு கலாசாரப் பெருவிழாவில் இலங்கை செயன்முறைப் பகுதிகள், உணவு மையங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் என பல்வேறு செயற்பாடுகளினூடாகப் பங்கேற்று இருந்தது. கலந்துகொண்ட பார்வையாளர்களுக்காக இலங்கையின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பரிமாறப்பட்ட அதே வேளை குறித்த மூன்று நாட்களும் இலங்கையைச் சேர்ந்த சமயற் கலைஞர்களால் செயன்முறை வலயத்தில் தேங்காய் ரொட்டி, மீன் கட்லெட், கொத்து, கொக்கீஸ் மற்றும் கொண்டைப் பலகாரம் போன்ற இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளைச் செய்து காட்டும் நேரடி நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களாலும், நடனக் கலைஞர்களாலும் இலங்கையின் உயர் கலாசார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டக் கூடிய பாரம்பரிய நடனங்கள் குறித்த நிகழ்வின் போது அரங்கேற்றப்பட்டன.

மேற்படி கண்காட்சி பகுதியில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த உணவு மையங்கள் மற்றும் சில்லறை கடைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட சாவடிகள் (Booths) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. சவுதி உணவுக் கலை ஆணைக்குழு (Saudi Culinary Arts Commission) வாழ்க்கைத் தர நிகழ்ச்சித் திட்டத்துடன் (Quality of Life Program) இணைந்து ஏற்பாடு செய்த இந்த உணவு கலாசாரப் பெருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. இது சவுதி அரேபியாவின் தொலைநோக்கு – 2030 நிகழ்ச்சி நிகழ்ச்சி திட்டத்தில் உள்ள கலை மற்றும் கலாசாரத்திற்கான சவுதி அரேபியாவின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமானதொரு செயற்பாடாகும்.

இலங்கை தூதரகம்

ரியாத்

24.02.2025

Scroll to Top