Ambassador Ameer Ajwad Meets with the Board of Directors and PTA of the Sri Lankan International School (SLISR) in Riyadh

Ambassador Ameer Ajwad Meets with the Board of Directors and PTA of the Sri Lankan International School (SLISR) in Riyadh

Patron of the Sri Lankan International School Riyadh (SLISR) Ambassador Ameer Ajwad recently met with the Board of Directors and the Parent-Teachers Association (PTA) of the Sri Lankan International School in Riyadh and held productive discussions focusing on the future development of the school.

While welcoming the Ambassador and the Patron of school to the Kingdom of Saudi Arabia, the Board of Directors apprised on the progress made over the decades and challenges faced by the school. PTA of the school discussed with the Ambassador on ways and means to improve the service of Education to the children of the SLISR.

Commending the yeoman service rendered by the Sri Lanka International School in Riyadh over the decades Ambassador Ameer Ajwad emphasized the importance of providing quality education to the children of migrant workers in the Kingdom. He also termed the SLISR as “Sri Lanka’s asset” in the Kingdom and extended his utmost support to the development of the school in the years ahead. Ambassador also stressed the importance of reconnecting the alumni of the SLISR who are spread all over the globe, with a view to engaging them in support of the school development initiatives.

The Sri Lankan International School Riyadh (SLISR) which was founded in 1988, is an independent, non-profit, community school and serves as an Education Center of Excellence for Sri Lankan community in Riyadh.

Sri Lanka Embassy

Riyadh

09.10.2024

___________

තානාපති අමීර් අජ්වාඩ් මහතා රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසලේ (SLISR) අධ්‍යක්ෂ මණ්ඩලය සහ ගුරුදෙගුරු සංගමය( PTA) හමුවෙයි

රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසලේ (SLISR) අනුශාසක තානාපති අමීර් අජ්වාඩ් මහතා පසුගියදා රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසලේ අධ්‍යක්ෂ මණ්ඩලය සහ ගුරුදෙගුරු සංගමය හමුවී පාසලේ අනාගත සංවර්ධනය කෙරෙහි අවධානය යොමු කරමින් ඵලදායී සාකච්ඡා පැවැත්වීය.

අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපතිවරයා සහ පාසලේ අනුශාසකවරයා ලෙස පිළිගනිමින්, දශක ගණනාවක් තිස්සේ පාසල ලබාගත් ප්‍රගතිය සහ මුහුණදුන් අභියෝග පිළිබඳව දැනුවත් කරන ලදී. රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසල (SLISR) හි දරුවන්ට ලබාදෙන අධ්‍යාපන සේවාව වැඩිදියුණු කිරීමේ ක්‍රම සහ විධි පිළිබඳව පාසලේ ගුරුදෙගුරු සංගමය විසින් තානාපතිවරයා සමඟ සාකච්ඡා කරන ලදී.

රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසල දශක ගණනාවක් පුරා සිදු කරන ලද විශිෂ්ට සේවාව අගය කළ තානාපති අමීර් අජ්වාඩ් මහතා රාජධානියේ සිටින සංක්‍රමණික ශ්‍රමිකයන්ගේ දරුවන්ට ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබාදීමේ වැදගත්කම අවධාරණය කළේය. ඔහු ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසල රාජධානියේ “ශ්‍රී ලංකාවේ වත්කම” ලෙස ද හැඳින්වූ අතර ඉදිරි වසරවල පාසලේ දියුණුව සඳහා ඔහුගේ උපරිම සහාය ලබා දෙන බව ප්‍රකාශ කරන ලදී. ලොව පුරා විසිරී සිටින රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසල (SLISR) හි ආදි ශිෂ්‍යයන් පාසල් සංවර්ධන ව්‍යාපෘතිවලට සහය කරගැනීමේ අරමුණින් ඔවුන් නැවත සම්බන්ධ කරගැනීමේ වැදගත්කම ද තානාපතිවරයා අවධාරණය කළේය.

1988 දී ආරම්භ කරන ලද රියාද් හි ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසල (SLISR) ස්වාධීන, ලාභ නොලබන, ප්‍රජා පාසලක් වන අතර රියාද් හි ශ්‍රී ලාංකික ප්‍රජාව සඳහා විශිෂ්ඨ අධ්‍යාපන මධ්‍යස්ථානයක් ලෙස සේවාව සපයයි.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2024.10.09

___________

தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) பணிப்பாளர்கள் சபை மற்றும் பெற்றார் ஆசிரியர் சங்கத்துடன் சந்திப்பு

ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) போசகர் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் அண்மையில் பாடசாலையின் பணிப்பாளர்கள் சபை மற்றும் பெற்றார் ஆசிரியர் சங்கத்துடன் சந்திப்பினை மேற்கொண்டு பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தியை மையப்படுத்தி செயற்திறன் மிக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

குறித்த கலந்துரையாடலின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் என்ற வகையிலும் பாடசாலையின் போசகர் என்ற வகையிலும் சவுதி அரேபிய இராச்சியத்திற்கு வரவேற்ற பணிப்பாளர்கள் சபை கடந்த தசாப்தங்களில் தாம் மேற்கொண்டிருக்கின்ற முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்தும் பாடசாலை எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். பாடசாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கம் SLISRஇல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விச் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் தூதுவருடன் கலந்துரையாடியது.

இதன்போது கடந்த பல தசாப்தங்களாக ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை மேற்கொண்டு வருகின்ற மேலான சேவைகளைப் பாராட்டிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி அரேபியாவில் குடிபெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வலியுறுத்தினார். மேலும் தூதுவர் அவர்கள் SLISRஐ சவுதி அரேபியாவில் உள்ள “இலங்கையின் சொத்து” என்று அடையாளப்படுத்தியதுடன் எதிர்வரும் காலங்களில் பாடசாலையின் அபிவிருத்திக்கான தனது பூரண ஆதரவு கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்தார். மேலும் உலகெங்கும் பரவி வாழ்கின்ற SLISRன் பழைய மாணவர்களை மீள் இணைப்புச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் அவர்கள் பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பான முன்னெடுப்புகளுக்கு உதவும் விதத்தில் அவர்களை ஈடுபடுத்துவது தொடர்பிலும் கருத்துரைத்தார்.

ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை (SLISR) சுயாதீனமானதும், இலாப நோக்கமற்றதுமான ஒரு சமூகப் பாடசாலையாக இருப்பதுடன் ரியாதிலுள்ள இலங்கைச் சமூகத்திற்கு மிகச் சிறந்த கல்வியை வழங்குகின்ற மத்திய தளமாகவும் திகழ்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை தூதுவராலயம்

ரியாத்

09.10.2024

Scroll to Top