Sri Lanka Embassy in Riyadh launches “Ambassador’s Cup” Cricket Tournament to mark the 50th Anniversary of Diplomatic Relations between Sri Lanka and Saudi Arabia 

Sri Lanka Embassy in Riyadh launches “Ambassador’s Cup” Cricket Tournament to mark the 50th Anniversary of Diplomatic Relations between Sri Lanka and Saudi Arabia 

The Sri Lankan Embassy in Riyadh, in collaboration with the Sri Lankan Cultural Club in Riyadh, successfully organized the first ever “Sri Lanka Ambassador’s Cup Cricket Tournament” in Saudi Arabia to mark the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia. 

The event saw enthusiastic participation from 25 Cricket Teams of diverse Sri Lankan communities based in Riyadh. The tournament was an eleven –a-side competition with the maximum of five over per innings, held from December 3 to December 27, and concluded in an exciting final between Riyadh Lankans and Gulf Lions. 

The Riyadh Lankans clinched the “Sri Lanka Ambassador’s Cup” showcasing exceptional talent and teamwork. Mr. Arshad of the Gulf Lions was named the Man of the Series for his consistent performance, while Mr. Rifas of the Riyadh Lankan earned the Man of the Match award for his remarkable contributions in the final game. Third place was taken by Green Lands club. 

Gracing the occasion as the chief guest Ambassador Ameer Ajwad announced that Sri Lanka Embassy in Riyadh in collaboration with Sri Lankan Cultural Forum would host “Sri Lanka Ambassador’s Cup” cricket tournament annually from the year 2024, the commemorative year of 50th anniversary of diplomatic relations. Ambassador also emphasized that the team spirit of cricket provides a platform to unite Sri Lankan expatriate community abroad and strengthen their bonds of friendship and mutual understanding. Ambassador further highlighted that Saudi Arabia is becoming a global sports hub for hosting major international sports including FIFA 2030 and Asian Winter Games 2029. Saudi Arabia has also established ‘Saudi Cricket Federation’ to promote cricket in the Kingdom and therefore Sri Lanka and Saudi Arabia could explore opportunities for bilateral cooperation in cricket. 

Ambassador Ameer Ajwad presented the first ever “Sri Lanka Ambassador’s Cup” to the captain of the winning team, the Riyadh Lankans. 

First Secretary of the Sri Lanka Embassy in Riyadh Vindana Munasinghe and Attache for Consular affairs in the Embassy Chamara Perera, the Convener of the Sri Lanka Cultural Forum Nihal Gamage and the sports coordinator of the Cultural Forum Michael Nixon coordinated the arrangements of this maiden “Sri Lanka Ambassador’s Cup Cricket Tournament – 2024”.

Meanwhile, the Sri Lanka Consulate General in Jeddah along with the Sri Lankan Expatriate Society also organized Cricket Tournament to coincide with the Sri Lanka Ambassador’s Cup Cricket Tournament -2024″ organized by the Embassy of Sri Lanka in Riyadh, to commemorate the 50th Anniversary of Sri Lanka – Saudi Arabia Diplomatic relations. Sri Lanka Titans team emerged as Champions while Lankan Lions secured the Runners up position out of the 8 teams participated in the tournament.

Embassy of Sri Lanka 

Riyadh 

31.12.2024

රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවලට වසර 50ක් පිරීම නිමිත්තෙන්තානාපති කුසලානක්‍රිකට් තරඟාවලිය දියත් කරයි.

ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවලට වසර 50ක් පිරීම නිමිත්තෙන් රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය, රියාද්හි ශ්‍රී ලංකා සංස්කෘතික සංසදය සමඟ එක්ව සෞදි අරාබියේ ප්‍රථම වරට සංවිධානය කරන ලද “ශ්‍රී ලංකා තානාපති කුසලාන ක්‍රිකට් තරගාවලිය” සාර්ථකව සංවිධානය කරන ලදී.

මෙම අවස්ථාවට රියාද් හි  ශ්‍රී ලාංකික ප්‍රජාවන්ට අයත් ක්‍රිකට් කණ්ඩායම් 25ක උද්යෝගිමත් සහභාගීත්වය දක්නට ලැබිණි. මෙම තරඟාවලිය දෙසැම්බර් 3 සිට දෙසැම්බර් 27 දක්වා පැවති අතර එක් ඉනිමකට උපරිම ඕවර පහක් සහිත එක කණ්ඩායමකට ක්‍රිඩකයින් එකොළොස් දෙනෙකුගෙන් යුත් තරඟයක් වූ අතර රියාද් ලන්කන්ස් සහ ගල්ෆ් ලයන්ස් අතර උද්වේගකර අවසන් තරඟයකින් අවසන් විය.

රියාද් ලන්කන්ස් සුවිශේෂී දක්ෂතා සහ කණ්ඩායම් ක්‍රියාකාරකම් ප්‍රදර්ශනය කරමින් “ශ්‍රී ලංකා තානාපති කුසලාන” ශූරතාව දිනා ගැනීමට සමත් විය. ඔහුගේ ස්ථාවර දස්කම් හේතුවෙන් ගල්ෆ් ලයන්ස් හි ඕචාඩ් මහතා තරඟාවලියේ වීරයා ලෙස නම් කෙරුණු අතර රියාද් ලන්කන්ස් හි රිෆාස් මහතා අවසන් තරඟයේදී ඔහු දැක්වූ විශිෂ්ට දායකත්වය වෙනුවෙන් තරඟයේ වීරයා සම්මානය හිමිකර ගත්තේය. තෙවැනි ස්ථානය ග්‍රීන් ලෑන්ඩ්ස් සමාජයට හිමිවිය.

මෙම අවස්ථාවට ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස සහභාගි වූ තානාපති අමීර් අජ්වාර්ඩ් මහතා ප්‍රකාශ කළේ රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය ශ්‍රී ලංකා සංස්කෘතික සංසදය සමඟ එක්ව රාජ්‍යතාන්ත්‍රික සබඳතාවල 50 වැනි සංවත්සරයේ සමරු වර්ෂය වන 2024 වසරේ සිට වාර්ෂිකව “ශ්‍රී ලංකා තානාපති කුසලාන” ක්‍රිකට් තරඟාවලිය පවත්වන බවයි. ක්‍රිකට් ක්‍රීඩාවේ කණ්ඩායම් හැඟීම විදේශගත ශ්‍රී ලාංකික ප්‍රජාව එක්සත් කිරීමට සහ ඔවුන්ගේ මිත්‍රත්වයේ සහ අන්‍යෝන්‍ය අවබෝධයේ බැඳීම් ශක්තිමත් කිරීමට වේදිකාවක් සපයන බව ද තානාපතිවරයා අවධාරණය කළේය. FIFA 2034 සහ Asian Winter Games 2029 ඇතුළු ප්‍රධාන ජාත්‍යන්තර ක්‍රීඩා පැවැත්වීම සඳහා සෞදි අරාබිය ගෝලීය ක්‍රීඩා කේන්ද්‍රස්ථානයක් බවට පත්වෙමින් පවතින බවත් ක්‍රිකට් ක්‍රීඩාවේ ද්විපාර්ශ්වික සහයෝගීතාව සඳහා ඇති අවස්ථා ගවේෂණය කළහැකි බව තානාපතිවරයා වැඩිදුරටත් අවධාරණය කළේය.

තානාපති අමීර් අජ්වාඩ් විසින් ප්‍රථම වරට “ශ්‍රී ලංකා තානාපති කුසලාන” ජයග්‍රාහී කණ්ඩායම වූ රියාද් ලංකන් හි නායකයා වන වෙත පිරිනැමීය.

“ශ්‍රී ලංකා තානාපති කුසලාන ක්‍රිකට් තරඟාවලිය – 2024″ සඳහා ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ ප්‍රථම ලේකම් වින්දන මුණසිංහ සහ තානාපති කාර්යාලයේ කොන්සියුලර් කටයුතු සඳහා අනුයුක්ත පරිවාර නිලධාරී චාමර පෙරේරා, ශ්‍රී ලංකා සංස්කෘතික සංසදයේ කැඳවුම්කරු නිහාල් ගමගේ සහ සංස්කෘතික සංසදයේ ක්‍රීඩා සම්බන්ධීකාරක මයිකල් නික්සන් යන මහත්වරු මෙම කටයුතු සම්බන්ධීකරණය කළහ.

මේ අතර, රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් සංවිධානය කරන ලද ශ්‍රී ලංකා තානාපති කුසලාන ක්‍රිකට් තරඟාවලිය -2024 ට සමගාමීව ශ්‍රී ලංකා විදේශගත සමාජය සමඟ එක්ව ජෙඩාහි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය 50 වන සංවත්සරය සැමරීම සඳහා ක්‍රිකට් තරඟාවලිය ද සංවිධානය කරන ලදී. එම තරඟාවලියේ ශ්‍රී ලංකා ටයිටන්ස් කණ්ඩායම ශූරයන් බවට පත් වූ අතර ලන්කන් ලයන්ස්  තරගාවලියට සහභාගි වූ කණ්ඩායම් 8න් අනුශූරතාව හිමිකර ගත්තේය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2024.12.31

இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டஇலங்கைத் தூதுவர் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி – 2024″

இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம், ரியாதிலுள்ள இலங்கைக் கலாசார மன்றத்துடன் இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக “இலங்கைத் தூதுவர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியை” வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

அணிக்கு 11 பேர் மற்றும் ஒரு சுற்றுக்கு 5 ஓவர் என்ற அடிப்படையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியில் ரியாத் வாழ் இலங்கையர்களை உள்ளடக்கிய 25க்கும் மேற்பட்ட அணிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றன. டிசம்பர் மூன்றாம் திகதி முதல் 27ம் திகதி வரை இடம் பெற்ற இப்போட்டித் தொடர் ‘ரியாத் ஸ்ரீலங்கன்ஸ்’ மற்றும் ‘கGல்ஃப் லயன்ஸ்’ ஆகிய அணிகளுக்கிடையிலான பரபரப்பான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது.

இறுதிப் போட்டியில் அபார திறமையுடனும் குழு ஒருமைப்பாட்டுடனும் களமிறங்கி விளையாடிய  ‘ரியாத் ஸ்ரீலங்கன்’ அணி “இலங்கைத் தூதுவர் கிண்ணத்தை” சுவிகரித்துக் கொண்டது. இந்தச் சுற்றுப்போட்டியின் ஆட்டத் தொடர் நாயகனாக ‘கGல்ஃப் லயன்ஸ்’ அணியைச் சேர்ந்த திரு. அர்ஷத் அவர்களும், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ‘ரியாத் ஸ்ரீலங்கன்’ அணியைச் சேர்ந்த திரு. ரிபாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த போட்டியின் மூன்றாம் இடத்தை ‘க்ரீன் லேன்ட்ஸ்’ அணி பெற்றுக்கொண்டது.

இறுதிச்சுற்றுத் தொடரின் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள்,  இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 வருடம் நிறைவடைந்த ஆண்டாகிய 2024 ஆம் ஆண்டு முதல் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் ரியாதிலுள்ள இலங்கைக் கலாசார மன்றத்துடன் இணைந்து “இலங்கைத் தூதுவர் கிண்ணச் சுற்றுப்போட்டியை” வருடாந்தம் நடாத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற குழு உணர்வானது வெளிநாடுகளில்  இடம்பெயர்ந்து வாழும் இலங்கைச் சமூகத்திற்கு மத்தியில்  நட்பையும், பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்ப்பதாக வலியுறுத்தியதுடன், சவுதி அரேபியாவானது FIFA – 2034 மற்றும் குளிர்கால ஆசிய விளையாட்டு – 2029 போன்ற மிக முக்கியமான சர்வதேச விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருப்பதன் ஊடாக உலகளாவிய விளையாட்டு மையமாக மாறிவருகின்றது எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தூதுவர் அவர்கள் சவுதி அரேபியாவானது இராச்சியத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ‘சவுதி கிரிக்கெட் சம்மேளனம்’ என்ற தாபனத்தை உருவாக்கி இருப்பதாகவும் இதன் மூலம் இலங்கையும் சவுதி அரேபியாவும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள்  “இலங்கைத் தூதுவர் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி”யின் முதலாவது வெற்றிக்கிண்ணத்தை இந்தச் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய ‘ரியாத் ஸ்ரீலங்கன்’ அணியின் தலைவருக்கு வழங்கி வைத்தார்.

நடந்து முடிந்த “இலங்கைத் தூதுவர் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி – 2024” முதற் போட்டித் தொடரை  ரியாதிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் முதலாம் செயலாளர் திரு. விந்தன முனசிங்க,  கன்சியுலர் பிரிவின் தூதரக இணைப்பதிகாரி திரு. சாமர பெரேரா, இலங்கைக் கலாசார மன்ற ஏற்பாட்டாளர் திரு. நிஹால் கமகே மற்றும் கலாசார மன்றத்தின் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. மைக்கல் நிக்ஸன் ஆகியோர் ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்தனர்.

அதேவேளை   ரியாதிலுள்ள “இலங்கைத் தூதுவர் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி – 2024” போட்டித்தொடருடன் இணைந்ததாக, இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகமும் இடம்பெயர்ந்து வாழும் இலங்கைச் சமூகத்தினருடன் இணைந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அப்போட்டித் தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் ‘ஸ்ரீ லங்கா டைட்டன்ஸ்’ அணி சம்பியன் கிண்ணத்தையும் ‘லங்கன் லயன்ஸ்’ அணி ரனர்ஸ் அப் கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டன.

இலங்கைத் தூதரகம்

ரியாத்

31.12.2024

Scroll to Top