


Saudi Arabia’s Minister of Transport and Logistics Saleh Al-Jasser received Minister Bimal Rathnayake, Minister of Transport, Highways, Ports and Civil Aviation of Sri Lanka on the sidelines of the 2nd Sustainable Maritime Industry Conference held in Jeddah from 03- 04 September 2025.
During the meeting, Minister Rathnayake briefed Minister Al-Jasser on the recent developments in Sri Lanka highlighting the country’s progress toward political and economic stability. He also underscored the growing opportunities in Sri Lanka’s ports and logistics sectors and emphasized the importance of establishing a bilateral mechanism to explore opportunities for collaboration between the two countries. Minister Ratnayake also extended invitation to Saudi delegation to participate at the International Maritime Summit, Voyage Sri Lanka- 2025, scheduled to be held on 16th October 2025 in Colombo.
Minister Al-Jasser congratulated Sri Lanka on its recent achievements and commended the government’s efforts in establishing a solid foundation for future development. He affirmed the Kingdom’s commitment to supporting Sri Lanka and expressed interest in fostering stronger partnerships, including through private sector engagement.
The both sides also agreed to continue to collaborate at the International Maritime Organization including capacity building programmes for seafarers for the mutual benefits.
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad along with the Acting Consul General in Jeddah Ms. Mafusa Lafir; Additional Director General Ms. D.A.S. Jayasekara and Mr. Asanka Chandrasena, Private Secretary to the Minister participated during the bilateral meeting between Minister Bimal Rathnayake and Minister Saleh Al-Jasser.
Embassy of Sri Lanka
Riyadh
04.09.2025
සෞදි ප්රවාහන හා සැපයුම් අමාත්යවරයා අමාත්ය බිමල් රත්නායක මහතා පිළිගනී
2025 සැප්තැම්බර් 03 සිට 04 දක්වා ජෙඩාහි පැවති 2 වන තිරසාර සමුද්රීය කර්මාන්ත සමුළුවට සමගාමීව සෞදි අරාබියේ ප්රවාහන හා සැපයුම් අමාත්ය සාලේ අල්-ජාසර් මහතා ශ්රී ලංකාවේ ප්රවාහන, මහාමාර්ග, වරාය සහ සිවිල් ගුවන් සේවා අමාත්ය බිමල් රත්නායක මහතාව පිළිගනී.
මෙම හමුව අතරතුර, ශ්රී ලංකාවේ දේශපාලන හා ආර්ථික ස්ථාවරත්වය වෙනුවෙන් ගෙන ඇති ප්රගතිය ඉස්මතු කරමින්, ශ්රී ලංකාවේ මෑත කාලීන වර්ධනයන් පිළිබඳව අමාත්ය රත්නායක මහතා අමාත්ය අල්-ජාසර් මහතාට විස්තර කළේය. ශ්රී ලංකාවේ වරාය සහ සැපයුම් අංශවල වර්ධනය වන අවස්ථා ද ඔහු අවධාරණය කළ අතර දෙරට අතර සහයෝගීතාව සඳහා අවස්ථා සොයාබැලීම සඳහා ද්විපාර්ශ්වික යාන්ත්රණයක් ස්ථාපිත කිරීමේ වැදගත්කම අවධාරණය කළේය. 2025 ඔක්තෝබර් 16 වන දින කොළඹදී පැවැත්වීමට නියමිත ජාත්යන්තර සමුද්රීය සමුළුව වන “Voyage Sri Lanka- 2025” සඳහා සහභාගී වන ලෙස අමාත්ය රත්නායක මහතා සෞදි නියෝජිත පිරිසට ආරාධනා කළේය.
ශ්රී ලංකාවේ මෑත කාලීන ජයග්රහණ පිළිබඳව අමාත්ය අල්-ජාසර් මහතා සුබ පැතූ අතර අනාගත සංවර්ධනය සඳහා ශක්තිමත් පදනමක් ස්ථාපිත කිරීම සඳහා රජය දරන උත්සාහයන් අගය කළේය. ශ්රී ලංකාවට සහාය දැක්වීම සඳහා සෞදි අරාබිය දක්වන කැපවීම ඔහු තහවුරු කළ අතර, පෞද්ගලික අංශයේ සහභාගීත්වය ඇතුළුව ශක්තිමත් හවුල්කාරිත්වයන් වර්ධනය කිරීමට කැමැත්ත පළ කළේය.
අන්යෝන්ය ප්රතිලාභ සඳහා නාවිකයින් සඳහා ධාරිතා සංවර්ධන වැඩසටහන් ඇතුළුව ජාත්යන්තර සමුද්රීය සංවිධානයේ සහයෝගයෙන් කටයුතු කිරීම දිගටම කරගෙන යාමට දෙපාර්ශ්වයම එකඟ වූහ.
අමාත්ය බිමල් රත්නායක සහ අමාත්ය සාලේ අල්-ජසාර් අතර ද්විපාර්ශ්වික හමුවට සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් සහ ජෙඩාහි වැඩබලන කොන්සල් ජෙනරාල් මාෆුසා ලෆීර් මහත්මිය; අතිරේක අධ්යක්ෂ ජනරාල් ඩී.ඒ.එස්. ජයසේකර මහත්මිය සහ අමාත්යවරයාගේ පෞද්ගලික ලේකම් අසංක චන්ද්රසේන මහතා යන මහත්ම මහත්මින් සහභාගී වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.09.07
சவுதி அரேபியாவின் போக்குவரத்து மற்றும் விநியோகத்துறை அமைச்சருடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சந்திப்பு
சவுதி அரேபியாவின் போக்குவரத்து மற்றும் விநியோகத்துறை அமைச்சர் திரு. ஸாலிஹ் அல்-ஜாஸிர் அவர்கள், 2025 செப்டம்பர் 03 முதல் 04 வரை ஜித்தாவில் நடைபெற்ற இரண்டாவது நிலைத்து நிற்கும் கடற்தொழில் மாநாட்டு நிகழ்வுகளின் போது, இலங்கையின் போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சர் ஸாலிஹ் அல்-ஜாஸிர் அவர்களிடம் எடுத்துரைதத்ததுடன், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் ஏற்பட்டு வருகின்ற பல்வேறு வாய்ப்புகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் இரு நாடுகளுக்கும் இடையில் சாத்தியமான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கென இருதரப்பு முறைமை ஒன்றை உருவாக்குவதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தினார்.
மேலும் இதன் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், எதிர்வரும் 2025.10.16 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச கடல்சார் உச்சி மாநாடு – “வொயேஜ் ஸ்ரீலங்கா 2025” நிகழ்வில் பங்கேற்க வருமாறு சவுதி பிரதிநிதி குழுவுக்கான அழைப்பினையும் மேற்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸாலிஹ் அல்-ஜாஸிர் அவர்கள், இலங்கை சமீபத்தில் அடைந்துள்ள சாதனைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கை அரசாங்கம் எதிர்கால முன்னேற்றத்திற்காக அமைத்துள்ள வலுவான அடித்தளம் தொடர்பிலும் பாராட்டிப் பேசினார். அத்துடன், இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவு தொடர்பில் சவுதி அரேபியாவின் அக்கறை தொடர்ந்தும் காணப்படும் என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர் அவர்கள், தனியார் துறையின் பங்குபற்றுதலையும் உள்ளடக்கிய பல துறைகளில் வலுவான கூட்டாண்மைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான தனது ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினார்.
இரு தரப்பினரும், சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதோடு, கடலோடிகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்வது போன்ற போன்ற துறைகளிலும் பரஸ்பர நன்மைக்காக இணைந்து செயற்பட உடன்பாடு கண்டனர்.
அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி அரேபியாவின் போக்குவரத்து மற்றும் விநியோகத்துறை அமைச்சர் திரு. ஸாலிஹ் அல்-ஜாஸிர் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற இந்த இருதரப்பு சந்திப்பில், சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் மாண்புமிகு தூதுவர் அமீர் அஜ்வத், ஜித்தாவிலுள்ள பதில் கொன்சல் ஜெனரல் திருமதி மஃபூஸா லாபிர், மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. டி.ஏ.எஸ். ஜயசேகர மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு. அசங்க சந்திரசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
07.09.2025