


Minister of Transport, Highways, Ports, and Civil Aviation of Sri Lanka, Bimal Rathnayake, met with Eng. Suliman bin Khalid Al-Mazroua, President of the Saudi Ports Authority (MAWANI), today in Jeddah. The meeting took place on the sidelines of the 2nd Sustainable Maritime Industry Conference being hosted by Saudi Arabia from 3-4 September 2025.
Discussions centered on strengthening maritime and port cooperation between Sri Lanka and Saudi Arabia, with a focus on strategic collaboration between key ports in both countries.
Minister Rathnayake highlighted recent positive developments in Sri Lanka, including political stability and economic progress. He emphasized the importance of shared growth in maritime connectivity across shipping routes linking South Asia and the Middle East. The Minister also outlined potential investment and partnership opportunities available for Saudi stakeholders in Sri Lanka’s port and maritime sectors.
The two delegations explored avenues for cooperation in seafarer training and agreed to enhance collaboration within multilateral platforms, including the International Maritime Organization (IMO).
Minister Rathnayake was accompanied by Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad, Acting Consul General in Jeddah Ms. Mafusa Lafir; Ms. D.A.S. Jayasekara, Additional Director General and Mr. Asanka Chandrasena, Private Secretary to the Minister.
The Saudi delegation included the President, Vice President, and senior officials of MAWANI.
Sri Lanka Embassy
Riyadh
03.09.2025
දෙවන තිරසාර සමුද්රීය කර්මාන්ත සමුළුවට සමගාමීව අමාත්ය බිමල් රත්නායක මහතා සෞදි වරාය අධිකාරියේ ප්රධානියා හමුවෙයි
ශ්රී ලංකාවේ ප්රවාහන, අධිවේගී මාර්ග, වරාය සහ සිවිල් ගුවන් සේවා අමාත්ය බිමල් රත්නායක මහතා, සවුදි අරාබියේ වරාය අධිකාරිය වන MAWANI හි සභාපති ඉංජිනේරු සුලෙයිමාන් බින් ඛාලිද් අල්-මස්රුවා මහතා හමුවිය. 2025 සැප්තැම්බර් 3-4 දක්වා සෞදි අරාබිය විසින් සත්කාරකත්වය දරන 2 වන තිරසාර සමුද්රීය කර්මාන්ත සමුළුවට සමගාමීව මෙම හමුව පැවැත්විණි.
එහිදී ශ්රී ලංකාව සහ සවුදි අරාබිය අතර වරාය සහ සමුද්ර සහයෝගීතාව වර්ධනය කිරීම පිළිබඳව සාකච්ඡා විය. දෙරටේ මූලික වරායන් අතර මෙහෙයුම්මය සහයෝගිතාවක් ගොඩනඟා ගැනීමේ අවශ්යතාවය පිළිබඳව ද අවධානය යොමු විය.
අමාත්ය රත්නායක මහතා ශ්රී ලංකාවේ පවතින දේශපාලන ස්ථාවරතාවය හා ආර්ථික ප්රගතිය පිළිබඳව තොරතුරු ඉස්මතු කළ අතර, දකුණු ආසියාව සහ මැද පෙරදිග ආශ්රිත ප්රදේශයන් අතර සමුද්ර සන්නිවේදන මාර්ගවල සංවර්ධනය සහ එකමුතු වර්ධනය අවශ්ය බවද අවධාරණය කළේය. ශ්රී ලංකාවේ වරාය හා සමුද්ර කර්මාන්ත ක්ෂේත්රවල සවුදි ආයෝජකයින් සඳහා පවතින ආයෝජන සහ හවුල්කාරීත්ව අවස්ථා පිළිබඳව ද ඔහු විස්තර කළේය.
නාවිකයින් පුහුණු කිරීමේ සහයෝගීතාවය සඳහා මාර්ග ගවේෂණය කළ නියෝජිත කණ්ඩායම් දෙක, ජාත්යන්තර සමුද්රීය සංවිධානය (IMO) ඇතුළු බහුපාර්ශ්වික වේදිකා තුළ සහයෝගීතාව වැඩි දියුණු කිරීමට එකඟ විය.
මෙම හමුව සඳහා අමාත්ය රත්නායක මහතා සමඟ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, ජිද්දා හි වැඩබලන කොන්සල් ජෙනරල්වරිය මෆූසා ලාෆිර් මහත්මිය, අතිරේක ලේකම් දර්ශිකා අනුජානි මහත්මිය, සහ අමාත්ය පුද්ගලික ලේකම් අසංක චන්ද්රසේන මහතා සහභාගි වූහ.
සෞදි පාර්ශ්වය නියෝජනය කරමින් MAWANI හි සභාපති, උප සභාපති සහ ජ්යෙෂ්ඨ නිළධාරීන් සහභාගි වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය – රියාද්
03/09/2025
2 ஆவது நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில், அமைச்சர் பிமல் ரத்னாயக்க, சவூதி துறைமுக ஆணையத்தின் தலைவரை சந்தித்தார்.
இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், சவூதி துறைமுக ஆணையத்தின் (MAWANI) தலைவர் Eng. சுலைமான் பின் காலித் அல்-மஸ்ருவா அவர்களை, இன்று ஜித்தாவில் நடைபெற்ற 2 ஆம் நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில் (Sustainable Maritime Industry Conference) சந்தித்தார்கள். இம்மாநாடு சவுதி அரேபியாவினால் 2025, செப்டம்பர் 3 – 4 ஆம் திகதிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான கடல்சார் மற்றும் துறைமுக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறிப்பாக, இரு நாடுகளின் முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான மூலோபாய கூட்டிணைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் ரத்நாயக்க அவர்கள், இலங்கையில் நிலவி வரும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக்காட்டினார்கள். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் கப்பல் போக்குவரத்து வழிகளில் கடல்சார் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் வலியுறுத்தினார். மேலும், அவர், இலங்கையின் துறைமுக மற்றும் கடல்சார் துறைகளில் சவூதி முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு மற்றும் பங்குடமை வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
இரு தரப்பினரும் கடற்படைப் பணியாளர் பயிற்சி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்ததுடன், சர்வதேச கடல் அமைப்பு (IMO) உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் விடயத்தில் உடன்பட்டனர்.
அமைச்சருடன், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், ஜித்தாவில் பணிபுரியும், பதில் கன்சுல் ஜெனரல் மபூசா லாஃபிர், மேலதிக செயலாளர் தர்ஷிகா அனோஜனி மற்றும் அமைச்சர் அவர்களின் அந்தரங்க செயலாளர், அசங்க சந்த்ரசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
சவூதி தரப்பிலிருந்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் MAWANI நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
03/09/2025