

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad met with the Director of the UN Tourism Regional Office for Middle East based in Riyadh, Samer Al Kharashi on 17 July 2025 and discussed on ways and means for promoting rural tourism industry in Sri Lanka.
Director Al Kharashi extended a warm welcome to the Ambassador and his delegation to the UN World Tourism Organization (UNWTO) Regional Office in Riyadh and presented an overview of their activities with particular emphasis on the Rural Tourism Development Programme. He also pointed that Sri Lanka as a high profiled tourist destination in the world, has a huge potential to contribute to the global tourism industry.
Ambassador Ameer Ajwad highlighted that uplifting the rural economy is one of the priorities of the Government of Sri Lanka and that the UN flagship initiatives such as “Best Tourism Villages (BTV)” which aims to promote sustainable and inclusive rural tourism, will potentially support the rural economic development in Sri Lanka. Mr. Jost Neuman made a comprehensive presentation on the BTV initiative, STAR services, and the technical assistance and capacity-building opportunities available to the Member States. Ambassador Ameer Ajwad proposed organizing information sharing sessions between the UN team handling rural tourism development and Sri Lanka tourism development authorities in Colombo.
Both sides agreed to strengthen collaboration in areas such as technical assistance, capacity building, and to explore opportunities for Sri Lanka’s active participation in the forthcoming UN Tourism programmes and conferences.
The UN Tourism Regional Office for the Middle East hosted by the Kingdom of Saudi Arabia in Riyadh, is the first regional office of the United Nations World Tourism Organization (UN WTO) outside Madrid. The Office serves as a hub to coordinate and promote tourism-related initiatives across the Middle East, in line with the UN Tourism mandate to foster sustainable, inclusive, and resilient tourism development globally.
Saudi Arabia will be hosting the 26th General Assembly of the UN World Tourism Organization in November 2025 in Riyadh.
Ambassador was accompanied by Mohammed Anas, HoC/Minister and Tashma Vithanawasam, First Secretary/Commerce of the Sri Lanka Embassy in Riyadh.
Embassy of Sri Lanka
Riyadh
30.07.2025
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති සහ එක්සත් ජාතීන්ගේ සංචාරක ප්රාදේශීය අධ්යක්ෂවරයා ග්රාමීය සංචාරක කර්මාන්තයේ ප්රවර්ධනයේ සහයෝගීතාව ගවේෂණය කරයි
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් 2025 ජූලි 17 වන දින රියාද් හි පිහිටි එක්සත් ජාතීන්ගේ සංචාරක කලාපීය කාර්යාලයේ අධ්යක්ෂ සමර් අල් කරාෂි හමුවී ශ්රී ලංකාවේ ග්රාමීය සංචාරක කර්මාන්තය ප්රවර්ධනය කිරීමේ ක්රම සහ විධි පිළිබඳව සාකච්ඡා කළේය.
රියාද් හි පිහිටි එක්සත් ජාතීන්ගේ ලෝක සංචාරක සංවිධානයේ (UNWTO) ප්රාදේශීය කාර්යාලයේදී තානාපතිවරයා සහ ඔහුගේ දූත පිරිසට අධ්යක්ෂ අල් කරාෂි උණුසුම් පිළිගැනීමක් ලබා දුන් අතර ග්රාමීය සංචාරක සංවර්ධන වැඩසටහන කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරමින් ඔවුන්ගේ ක්රියාකාරකම් පිළිබඳ දළ විශ්ලේෂණයක් ඉදිරිපත් කළේය. ලෝකයේ ඉහළ පෙළේ සංචාරක ගමනාන්තයක් ලෙස ශ්රී ලංකාවට ගෝලීය සංචාරක කර්මාන්තයට දායක වීමට විශාල හැකියාවක් ඇති බව ද ඔහු පෙන්වා දුන්නේය.
ග්රාමීය ආර්ථිකය නංවාලීම ශ්රී ලංකා රජයේ ප්රමුඛතාවයන්ගෙන් එකක් බවත් තිරසාර සංවර්ධනය හා ග්රාමීය සංචාරක ප්රවර්ධනය කිරීම අරමුණු කරගත් “හොඳම සංචාරක ගම්මාන (BTV)” වැනි එක්සත් ජාතීන්ගේ ප්රමුඛ මුලපිරීම් තුලින් ශ්රී ලංකාවේ ග්රාමීය ආර්ථික සංවර්ධනයට සහාය විය හැකි බවත් තානාපති අමීර් අජ්වාඩ් අවධාරණය කළේය. ජොස්ට් නියුමන් මහතා BTV මුලපිරීම, STAR සේවා සහ සාමාජික රටවලට ලබා ගත හැකි තාක්ෂණික සහාය සහ ධාරිතා වර්ධනය කිරීමේ අවස්ථා පිළිබඳව පුළුල් ඉදිරිපත් කිරීමක් සිදු කළේය. තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ග්රාමීය සංචාරක සංවර්ධනය හසුරුවන එක්සත් ජාතීන්ගේ කණ්ඩායම සහ ශ්රී ලංකා සංචාරක සංවර්ධන බලධාරීන් අතර තොරතුරු බෙදාගැනීමේ සැසි කොළඹ දී සංවිධානය කිරීමට යෝජනා කළේය.
තාක්ෂණික සහාය, ධාරිතා වර්ධනය වැනි ක්ෂේත්රවල සහයෝගීතාව ශක්තිමත් කිරීමට සහ ඉදිරි එක්සත් ජාතීන්ගේ සංචාරක වැඩසටහන් සහ සම්මන්ත්රණ සඳහා ශ්රී ලංකාවේ ක්රියාකාරී සහභාගීත්වය සඳහා අවස්ථා ගවේෂණය කිරීමට දෙපාර්ශ්වයම එකඟ විය.
රියාද්හි පිහිටි, සෞදි අරාබි රාජධානිය විසින් සත්කාරකත්වය දරන මැද පෙරදිග සඳහා වන එක්සත් ජාතීන්ගේ සංචාරක කලාපීය කාර්යාලය, මැඩ්රිඩ් නගරයෙන් පිටත එක්සත් ජාතීන්ගේ ලෝක සංචාරක සංවිධානයේ (UN WTO) පළමු කලාපීය කාර්යාලය වේ. මෙම කාර්යාලය, එක්සත් ජාතීන්ගේ සංචාරක සංවිධානයේ තීරණාත්මක මෙහෙයුම් සමඟ සහයෝගයෙන්, මැදපෙරදිග ප්රදේශය තුළ සංචාරක ක්රියාකාරකම් සමන්විත කිරීමට සහ ප්රවර්ධනය කිරීමට මධ්යස්ථානයක් ලෙස ක්රියා කරයි. මෙය ගෝලීය වශයෙන් තිරසාර සහ ආරක්ෂිත සංචාරක සංවර්ධනයක් උදෙසා ක්රියාත්මක වේ.
එක්සත් ජාතීන්ගේ ලෝක සංචාරක සංවිධානයේ 26 වන මහා සභා රැස්වීම 2025 නොවැම්බර් මාසයේදී සෞදි අරාබි සත්කාරකත්වයේ රියාද් හිදී පවත්වනු ඇත.
තානාපතිවරයා සමඟ රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ දූත මණ්ඩල ප්රධානී/අමාත්ය මොහොමඩ් අනාස් සහ පළමු ලේකම්/වාණිජ කටයුතු ටෂ්මා විතානවසම් ද සහභාගී වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.07.30
சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் ஐ.நா சுற்றுலா (UN -Tourism) பிராந்திய இயக்குநரின் முக்கிய சந்திப்பு – கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டை வழுப்படுத்தும் புதிய கூட்டுறவு முயற்சிகள் குறித்து கலந்துரையாடல்
2025 ஜூலை 17 ஆம் திகதி, சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதர் அமீர் அஜ்வத் அவர்கள், ரியாத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுலா (UN Tourism) கிழக்காசியப் பிராந்திய அலுவலகத்தின் இயக்குநர் திரு. சமர் அல் கராஷி அவர்களை சந்தித்து, இலங்கையின் கிராமப்புற சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றப் பாதைகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின் போது, இயக்குநர் திரு. சமர் அல் கராஷி, இலங்கை தூதுவருக்கும் அவரது குழுவிற்கும் அழகிய வரவேற்பு அளித்ததோடு, கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை மையப்படுத்திய விரிவான அறிமுகத்தையும் கொடுத்தார். மேலும், உலகின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் இலங்கைக்கு, உலக சுற்றுலாத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் அளவுக்கு மிகுந்த திறன் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கையின் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல், இலங்கை அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் என்பதை வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் “சிறந்த சுற்றுலா கிராமங்கள் (Best Tourism Villages – BTV)” திட்டம் போன்ற நிலையான மற்றும் ஒருங்கிணைந்த கிராமப்புற சுற்றுலா வளர்ச்சிக்கான முன்னணி முயற்சிகள், இலங்கையில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் தூதுவர் எடுத்துரைத்தார்.
மேலும் இச் சந்திப்பின் போது, BTV முயற்சி, STAR சேவைகள், மற்றும் உறுப்புநாடுகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து திரு. யோஸ்ட் நியூமன் அவர்கள் விரிவான விளக்கக்காட்சியினை (Presentation) வழங்கினார். மேலும் கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் மற்றும் கொழும்பிலுள்ள இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரிகளுக்கிடையில் தகவல் பகிர்வு அமர்வுகளை ஏற்பாடு செய்யவும் தூதர் அமீர் அஜ்வத் முன்மொழிந்தார்.
இரு தரப்பினரும், தொழில்நுட்ப உதவி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வரவிருக்கும் ஐ.நா சுற்றுலா திட்டங்கள் மற்றும் மாநாடுகளில் இலங்கையின் செயல்திறனான பங்கேற்பை உறுதிசெய்யும் புதிய வாய்ப்புகளை ஆராயவும் உடன்பட்டனர்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள மத்திய கிழக்குக்கான ஐ.நா. சுற்றுலா பிராந்திய அலுவலகம், மெட்ரிட் நகரத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் (UN-WTO) முதல் பிராந்திய அலுவலகமாகும். உலகளாவிய அளவில் நிலையான, உள்ளடக்கிய மற்றும் மீள்தன்மையுடைய சுற்றுலா வளர்ச்சியை முன்னெடுக்க ஐ.நா. சுற்றுலா ஆணையின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய கிழக்கு பகுதியின் சுற்றுலா முயற்சிகளை ஒருங்கிணைத்து ஊக்குவிப்பதில் இந்த அலுவலகம் முக்கிய மையமாக செயல்படுகின்றது.
மேலும், சவுதி அரேபியா, எதிர்வரும் நவம்பர் மாதம், தனது தலைநகரான ரியாத்தில், ஐ.நா. உலகச் சுற்றுலா அமைப்பின் 26வது பொதுச் சபையை மிகச் சிறப்பாக நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்ககு.
இந்த சந்திப்பில் தூதுவருடன், சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் (அமைச்சர்/தூதரகப் பிரதானி) – முகம்மது அனஸ் மற்றும் (முதல் செயலாளர் –வர்த்தகம்) தஷ்மா விதானவாசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
30.07.2025